நிபந்தனையற்ற பேச்சு நடத்த பிரபாகரன் தயார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது பேச்சில் எந்தவிதமான நிபந்தனையுமின்றி இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்றுவரும் இனக் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நார்வேயின் அமைதித்தூதர் எரிக் சோல்ஹன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்த மாத ஆரம்பத்தில் வன்னி காட்டில்சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அந்த பேச்சு வார்த்தையின் விவரம் குறித்து இலங்கை அரசிடமும் தெரிவித்தார். பிரபாகரன் எந்தநிபந்தனையுமின்றி பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமையன்று விடுதலைப் புலிகள் மாவீரர் தினம் கொண்டாடியது. அதில் கலந்து கொண்டுபிரபாகரன் பேசினார் அவரது பேச்சு புலிகளின் வானொலியான வாய்ய் ஆஃப் டைகர்ஸ் சில் திங்கள்கிழமையன்று ஒலி பரப்பப்பட்டது.

பிரபாகரன் இலங்கை அரசுடன் எந்த விதமான நிபந்தனையுமின்றி பேச்சு வார்த்தை தயாராக இருக்கிறோம். பேச்சுவாரத்தை ஆரம்பிக்கும் முன்பு தமிழர்கள் வாழும் பகுதியில் சகஜமான சூழ்நிலை ஏற்பட வேண்டியது முக்கியம்என பேசியுள்ளார்.

பிரபாகரனின் இந்த மனமாற்றம் இலங்கை இனப் பிரச்சனை விஷயத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தலாம் எனகருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+