மரியாதை கொடுக்கும் அணியுடன் கூட்டணி: தமிழ் தேசம்
சேலம்:
எந்த அணியாக இருந்தாலும் உரிய மரியாதை கொடுத்தால், அந்த அணியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத்தயாராக இருப்பதாக தமிழ் தேசம் கட்சியின் தலைவர் எஸ். கண்ணப்பன் தெரிவித்தார்.
சேலத்தில் தமிழ் தேசக் கட்சியின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் தேசம் கட்சியின்தலைவர் கண்ணப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்தேசம் கட்சித் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 30 மாவட்ட மாநாடுகளை நடத்தியுள்ளோம்.திருவண்ணாமலையில் தொடங்கி, சேலம் வரை இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் 40லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளோம்.
இற்காக 25 லட்சம் விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்துள்ளோம். 90 சட்டசபை தொகுதிகளில் 25 முதல்40 ஆயிரம் ஓட்டுகள் பெற்றுள்ளோம். 95 தொகுதிகளில் 15 தல் 20 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன.
185 தொகுதிகளில் ஓட்டு வங்கிகளை உருவாக்கியுள்ளோம். எல்ல சகத்தினரும் எங்கள் கட்சி நிர்வாகப்பொறுப்புகளில் உள்ளனர். டிசம்பர் மாதம் 23ம் தேதி சென்னையில் முதல் மாநில மாநாடு நடத்ததிட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டில் முலாயம் சிங் யாதவ் வருகை தர சம்மதம் தெரிவித்துள்ளார். எஸ்.சி. எஸ்.டிகூட்டமைப்புத் தலைவர் ராமராஜ், முஸ்லிம் தலைவர் அபு ஆசிப் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சென்னையில் மாநில மாநாட்டின் போது எங்கள் பலத்தை நிரூபிப்போம். இதன் பின்னர் புதிய யுத்தியைஉருவாக்குவோம்.
தற்போதுள்ள அரசியல் நிலவரம் தெளிவானதாக இல்லை. இப்போது இரண்டு அணியாக உள்ளதா, அல்லதுமூன்றாவது அணி உருவாகுமா என்பதிலும் தெளிவானதாக இல்லை. புதிய அரசியல் கட்சிகளுக்கு இடையேகருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து தேர்தல் வரும்போது முடிவுஏற்படும்.
மதிப்பிற்குரிய தலைவராக மூப்பனார் உள்ளார். அவரை மரியாதை நிமித்தமாகத் தான் சந்தித்தேன். தேர்தல் அணிபற்றி எந்த முடிவும் செய்யவில்லை.
அ.தி.மு.க.,வுடன் உறவு வைப்பதில் எவ்வித தவறும் இல்லை. நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்தால்,அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதில் தவறு இல்லை. எந்த அணியாக இருந்தாலும் உரிய மரியாதைகொடுத்தால், அந்த அணியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார் என்றார் கண்ணப்பன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications