வீரப்பனுக்கு உணவு செல்லும் பாதைகள் அடைப்பு
ஈரோடு:
சந்தன கடத்தல் வீரப்ப னுக்கு உணவு கொண்டு செல்லப்படும் பாதைகள் எனக் கருதப்படும் வழிகள் அனைத்தும்அடைக்கப்பட்டுள்ளன.
சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அதிரடிப்படையினர் மும்முரமாகியுள்ளனர்.
தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களைச்சேர்ந்த 1,320 போலீஸார் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, வீரப்பன் ஒளிந்து இருக்கும் காட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
அடர்ந்த காட்டுப்பகுதியில் வீரப்பன் எங்கெல்லாம் தங்கியிருப்பான் என்பது வரைபடம் மூலம் விளக்கப்பட்டு, அதன்அடிப்படையில் தேடுதல் வேட்டை நடக்கிறது. தற்பொழுது சத்தியமங்கலம், பண்ணாரி, தாளவாடி காட்டுப் பகுதியில் கடும்குளிரும் பனியும் இருப்பதால் வீரப்பன் ஏதாவது குகைக்குள் அடைக்கலமாகியிருப்பான் என்று கருதப்படுகிறது.
எனவே நவீன கருவிகளைப் பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடக்கிறது. இதற்கிடையே அவன் கர்நாடகக் காட்டுப்பகுதிக்கு தப்பிஒடியிருப்பான் என்ற சந்தேகமும் அதிரடிப்படையினருக்கு ஏற்பட்டுள்ளது.
அதற்கேற்ப அதிரடிப்படையினர் தங்களது திட்டங்களை மாற்றி அமைத்துள்ளனர். வீரப்பன் அடிக்கடி நடமாடும் பகுதிகளில்ஊடுருவ வசதியாக, அவனிடம் பணயக்கைதிகளாக இருந்த கோவிந்தராஜூவிடம் அதிரடிப்படையினர் ஆலோசனைகேட்டுள்ளனர்.
தேவைப்பட்டால் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கோவிந்தராஜூவை அழைத்துச்செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவைதவிர காடு, மலைகளில் நன்கு பயிற்சி பெற்ற ராணுவ கமெண்டோக்களை உதவிக்கு அழைக்கவும் தமிழ்நாடு- கர்நிாடக அரசுகள்மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
அதை ஏற்று கமாண்டோ படையை மத்திய அரசு அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகின்றது.
இந்த நிலையில், வீரப்பனை தனிமைபடுத்தவும், அவனை உணவு இல்லாமல் தவிக்க விடவும் அதிரடிப் படையினர் முடிவுசெய்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டனர்.
வீரப்பன் ஒதுங்கியிருக்கும் காட்டுப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களில் 90 சதவீதம் பேர் அவனுக்கு ஆதரவாகஇருக்கின்றனர். இதனால் உணவு உட்பட பல பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதால் அதைத் தடுத்து நிறுத்தும்முயற்சிகளில் இறங்கியுள்ளது அதிரடிப்படை.
ராஜ்குமாருடன் சேர்த்து கடத்தப்பட்ட கோவிந்தராஜூ 2 தினங்களுக்கு முன் தாங்கள் கடத்தப்பட்ட தொட்டகாஜனூர் பண்ணைவீட்டுக்குச் சென்று வந்தார். அவரிடம் வீரப்பனின் பதுங்குமிடங்கள் குறித்து அதிரடிப்படையினர் கேட்டு அறிந்ததாகத்தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications