தமிழக புயல்: சமாளிக்க ராணுவ உதவி
சென்னை:
தமிழகத்தில் புதன்கிழமை புயல் கரையைக் கடப்பதால் ஏற்படும் சேதங்களை சமாளிக்க ராணுவத்தின் உதவியைநாடியுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ரகுமான்கான் தெரிவித்தார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர் மாட்டத்தில்புதன்கிழமை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தின் வடக்குப் பகுதியான கடலூரில் ஏற்பட்டுள்ள கடும் மழையைச் சமாளிக்கவும், நிவாரணநடவடிக்கைகளுக்காகவும் ராணவத்தின் உதவியை நாடியுள்ளது தமிழகம்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், புதன்கிழமை பிற்பகல் புயல் கரையைக் கடப்பதால் நாகப்பட்டினம்,சென்னை, கடலூர் மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கடும் மழை ஏற்படும்என்று எச்சரித்துள்ளனர்.
அமைச்சர் பேட்டி:
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ரகுமான்கான், தலைமைச் செயலகத்தில் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில்,புயல் கரையைக் கடக்கும் போது, தமிழகத்தின் வடக்குக் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 170 கிலோ மீட்டர்வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களான விழுப்புரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை பகுதிகளில் கடும் மழை பெய்யும் என்று தெரிகிறது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் தொலைபேசி, மின்கம்பங்கள் வேரோடு சாயும் அபாயம் உள்ளது. குடிசைகள்,பலவீனமான கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
ராணுவ உதவி:
புயலினாலும், கடும் மழையினாலும் தவிர்க்க முடியாத அளவில் சேதம் ஏற்பட்டால் நிவாரண உதவிக்காக ராணுவஉதவியைக் கேட்டுள்ளோம்.
புயலால் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டக் கலெக்டர்களுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறோம். திடீரென்று ஏற்படும் அபாயத்தைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மரக்காணம் பகுதியில் மிகவும் தாழ்வான பகுதியில் வாழ்ந்து வரும் 350 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் நிவாரண மையங்கள்:
தமிழக அரசு, இதுவரை 150 புயல் நிவாரண மையங்களை அமைத்துள்ளது. இதுவரை அவர்களுக்கு சூறாவளிக்காற்றாலும், புயலாலும் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வரவில்லை என்றார்.
கடலூரில் கனமழை:
இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதாகவும், பிற்பகல்முதல் கடும் மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மாவட்டக் கலெக்டர் சந்தீப் சக்சேனா, தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களைபாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். சேதம் ஏற்படும் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படிஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications