அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் தமிழகம்-கேரளம் மோதல்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள எம்.பி.க்களிடையே பெரும் வாக்குவாதம்ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்த பின், கேரள எம்.பி.பிரான்சிஸ் ஜார்ஜ் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், தமிழக அரசு, முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
அணையின் உயரத்தை அதிகரித்தால் கேரள மாநிலத்தில் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மூன்று பெரிய மாவட்டங்கள் பெரும் பிரச்சனையைச்சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது.
நீர்ப்பாசன வசதித் திட்டங்களுக்காக அணையின் உயரத்தை 152 அடி உயரமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. இதையடுத்துஇது ஒரு பூதாகரமான பிரச்சனையாகி விட்டது.
அணையின் உயரத்தை அதிகரித்தால் மழை காலங்களில் கேரளாவின் மத்திய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்வது தேக்கடி ஏரி. இது பெரியாறு அணை அருகே உள்ளது. இதனால் அணையின் உயரத்தை அதிகரித்தால் இங்குள்ளமிருகக்காட்சி சாலை நீரில் மூழ்கும்.
முல்லைப்பெரியாறு அணை கட்டி 104 வருடங்கள் ஆகிறது. அதன் உயரம் அதிகரிக்கப்பட்டால் கண்டிப்பாக அணை மிகுந்த சேதமடையும். மேலும் 50கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடுக்கியில் உள்ள அணையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டை அணுகின. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மத்தியஅரசு, தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட கூட்டத்தைக் கூட்டியது.
இது குறித்து விவாதிக்க 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. அதில் ஒரு உறுப்பினர் மட்டுமே கேரளாவைச் சேர்ந்தவர். 6 பேர்மத்திய நீர் வளப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கேரளாவிலிருந்து 3 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம்பெறவேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை குறித்து விவாதிப்பதற்காக மீண்டும் இரு மாநில முதல்வர்கள், அதிகாரிகள் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்றுவலியுறுத்தார் ஜார்ஜ்.
தமிழக எம்.பி.வைகோ ஆட்சேபணை:
கேரள எம்.பி.ஜார்ஜின் பேச்சுக்கு மதிமுக தலைவர் வைகோ ஆட்சேபணை தெரிவித்தார். இதையடுத்து இரு மாநில எம்.பி.க்களுக்கும் கட்சி வித்தியாசம்இன்றி தங்களது மாநிலங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். சிறிது நேரம் கடும் வாக்குவாதம் நடந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications