ஸ்ரீரங்கம் கோயிலில் 8 சன்னிதானங்களில் கும்பாபிஷேகம்
ஸ்ரீரங்கம்:
திருச்சியின் ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவிலில் அமைந்துள்ள 8 சிறுசன்னிதானங்களில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ விட்டல் கிருஷண்ணன், ஸ்ரீஹனுமான், ஸ்ரீ வேணுகோபாலன் சன்னிதிகளில் உள்ளிட்ட 8 சன்னிதானங்களில் நடந்தமகா கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
தமிழக இந்து சமய அறங்காவல் துறையின் இணை கமிஷனர் மற்றும் அறங்காவலர்முத்துஸ்வாமியும் கோவில்களுக்கான நிதிக் குழுத் தலைவர் கிட்டுவும் நிருப்பர்களிடம்கூறுகையில், ரங்கநாத ஸ்வாமி கோவில்களில் உள்ள 54 சன்னிதகளில் 8 சன்னிதிகளில்மகா கும்பாபிஷேகம் நடந்தது.
ரங்கநாத ஸ்வாமி கோவிலின் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ம்தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.
முத்துஸ்வாமி மேலும் கூறியதாவது:
தற்போது நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளில் உலகிலேயே மிக உயரமானகோபுரமான ராஜகோரத்திற்கு புது வர்ணம் பூசவும் இந்துசமய அறநிலையத்துறைஅனுமதியளித்துள்ளது.
இந்த பணிக்கு சுமார் ரூ 50 லட்சம் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடையிலிருந்தே இந்த பணிமேற்கொள்ளப்படும்.
கட்டுமானப் பணிகளில் சிறந்து விளங்கும் எல் அன்ட் டி நிறுவனம் கோபுரத்தைபுதுப்பிப்பது மற்றும் புது வர்ணம் பூசுவதற்காக இரு லிப்ட்களையும். அடிப்படைகட்டமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் உதவிகளையும் இலவசாமாக செய்து தரமுன்வந்துள்ளது.
சென்னையில் இயங்கி வரும் பெயிண்ட் நிறுவனம் ஒன்றிடம் 4,000 லிட்டர் வண்ணபெயிண்ட்களையும், 1,000 லிட்டர்கள் பிரமைர் பெயிண்டும், 500 லிட்டர் தின்னர்பெயிண்டையும் நன்கொடையாக வழங்குமாறு கோவில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றார்.
கோவில் புதுப்பித்தல் குழுவின் தலைவரான வெங்கட்ராமன் கூறுகையில், கோவில்புதுப்பிப்பது தொடர்பான அனைத்து பணிகளும்பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைமூலமாகவே நடைபெறுகிறது.
இந்துசமய அறநிலையத்துறை மேலும் 6 கோவில்களை புதுப்பிக்கவும் அனுமதிஅளித்துள்ளது. பணிகள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளன என தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications