புலிகள் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது: அத்வானி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

விடுதலைப் புலிகளும், அவர்கள் ஆதரவாளர்களும் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறார்கள் என உள்துறைஅமைச்சர் அத்வானி தெரிவித்திருக்கிறார்.

ராஜ்குமார் கடத்தல் விவாகரம் தொடர்பாக வியாழக்கிழமையன்று எதிர் கட்சியினர் நாடாளுமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதற்கு பதிலளித்து அத்வானி பேசியதாவது:

நாட்டில் பல காலமாக விடுதலைப் புலிகள் சட்ட விரோதமான நட வடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் நடவடிக்கை மத்திய அரசால் உன்னிப்பாக கண் காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் கடலோரபகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கடத்தலில் சட்ட விரோதமாக ஈடுபடுவது குறித்தும் தகவல்கள்கிடைத்துள்ளன.

விடுதலைப் புலிகளின் மீதான தடை கடந்த மே மாதம் முதல் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது.இதற்கு தமிழக அரசும் பரிந்துரை செய்திருந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பு சட்ட விரோதமான அமைப்பு என 1992-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனாலும்நம்நாட்டின் ஒருமைப் பாட்டை குறைக்கும் வகையிலான செய்ல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகள் புலிகளின் அமைப்பு மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் பற்றிய செயல்களை கண்காணித்துவருகிறது. பல்வேறு அமைப்புகளின் புலனாய்வு அறிக்கைகளையும அரசு கவனமாக ஆராய்ந்து வருகிறது.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாரனை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்த பல்நோக்கு ஆணய அதிகாரிகள் 10 நாள் பயணமாக இலங்கைசென்று பேச்சு வாரத்தை நடத்தி விட்டு வந்திருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் ஊடுறுவல் மற்றும் கடத்தல் செயல்களை தடுப்பதற்காக கடலோர காவல் படைன்கண்காணிப்பு அதிகாரிகள் பல முக்கிய இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆயுத ம் ஏந்திய வீரர்கள் அடங்கிய வீரர்களும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜ்குமார் விவகாரம்:

ராஜ்குமார் கடத்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான தமிழ் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள்வந்துள்ளன. அது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

வீரப்பனை பிடிக்க மத்திய அரசு தமிழக, கர்நாடக அரசுகளுக்கு எல்லா உதவிகளையும் செய்யும். கமாண்டோபிரிவு, ராணுவம் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட எல்லா உதவிகளையும் செய்ய மத்திய அரசு செய்யதயாராக உள்ளது.

தமிழ்நாடு விடுதலை இயக்கம், தமிழர் மீட்பு இயக்கம் போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவந்துள்ளது. அது குறித்தும மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் குறித்து தமிழக அரசிடமிருந்துதகவல்கள் பெறப்பட்டது.

இது தொடர்பாக சென்னை, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டதாகதெரிவிக்கப்பட்டது. புலி ஆதரவு போஸ்டர்கள் போலீசாரால் கிழித்து எறியப்பட்டது.

அரசு கட்டிடத்தில் பிரபாகரன் விழா கொண்டாடப்படவில்லை. அந்த நிகழ்ச்சி ராஜ்குமார் விடுதலைசெய்யப்பட்டதற்காக நெடுமாறனுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளதுஎன்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+