இந்தியா - ஜிம்பாப்வே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: சனிக்கிழமை துவங்குகிறது
கட்டாக்:
இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒரு நாள்போட்டி தொடர் கட்டாக்கில் சனிக்கிழமைதுவங்குகிறது. இரு அணிகளூம் 5 போட்டிகளில் விளையாடும்.
கட்டாக்கின் பாரபாதி விளையாட்டு அரங்கின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக அமையும். இந்தவிளையாட்டு அரங்கில் இது வரை விளையாடிய 7 போட்டிகளில் இந்தியா 5 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஒரு முறை இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.ஒரு முறை இலங்கையிடம் தோல்வி அடைந்தது. ஆக இருமுறைமட்டுமே இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதனால் கட்டாக் இந்தியாவிற்கு ராசியான இடமாகவும்கருதப்படுகிறது.
இந்தியாவின் சார்பில் அணித் தலைவர் கங்குலியும், டெண்டுல்கரும் துவக்க ஆட்டக்கார்களாக களமிறங்குவார்கள்எனத் தெரிகிறது.
ஜிம்பாப்வே அணயின் துவக்க ஆட்டக்காரர் ஜோடியில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
டெஸ்ட் தொடரை 1-0 என்று வெற்றி பெற்றதன் மூலம் இந்திய ஒரு நாள் தொடரையும் வெல்ல முடியும் என்றநம்பிக்கையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது.
டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றாலும் பல புதிய சாதனைகளை இரண்டாவது டெஸ்டில் ஏற்படுத்தியதன் முலமும்,இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்ததன் மூலமும் புத்துயிர் பெற்று எப்படியும்ஒரு நாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் களமிறங்குகிறது ஜிம்பாப்வே.
எனவே இந்த ஒரு நாள் தொடர்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அணிகள்:
இந்தியா:
சவுரவ் கங்குலி (அணித் தலைவர்), ஷிவ சுந்தர் தாஸ், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுலகர், ரீடின்டர் சிங் சோதி,யுவராஜ் சிங், ஹேமந்த் படானி, ஸ்ரீதரன் ஸ்ரீராம், விஜய் தாஹியா (விக்கெட் கீப்பர்), சுனில் ஜோஷி. ஜாஹீர் கான்,அஜீத் அகார்கர், நிகில் சோப்ரா, வெங்கடேஷ் பிரசாத்.
ஜிம்பாப்வே:
ஹீத் ஸ்டிரீக் ( அணித் தலைவர்), காம்ப்பெல், காவின் ரெனி, க்ரான்ட் ஃப்ளாவர், கார்லிஸ், ஆன்டி ஃப்ளாவர்(விக்கெட் கீப்பர்), கய் விட்டால், விலியோன், டிராவிஸ் ஃப்ரென்ட், ஸ்டிராங், மாங்வா, மாரிலியர், மர்பி,ஒலோங்கோ
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications