கள்ளச் சாரயத்தை சுட்டிக் காட்டினால் அடி உதை: ஜெ.குமுறல்
சென்னை:
கருணாநிதி ஆட்சியில் அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்ல அனுமதிக்கப்படாமல் பொதுஇடங்களிலும் , மேடைகளிலும் தாக்கப்படுகின்ற அவல நிலை நீடிக்கின்றது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்துஓடுகின்றது என்று அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியிடம் பகிரங்கமாக எடுத்துக்கூறிய இளைஞரை, காவல் துறையினர் அடித்து உதைத்துத் தாக்கியிருப்பதுவன்மையாகக் கண்டிக்கத் தக்தது.
கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கக் கோரி காவல் துறையிடம் கள்ளச்சாரயம் பற்றி புகார் செய்தவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அநாகரிகஅரசியல் கருணாநிதி ஆட்சியில் அரங்கேறியுள்ளது.
சென்னையை அடுத்த செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத் திறப்பு விழாவில், அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியிடம்அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்கிற இளைஞர் கள்ளச் சாராயத்தைப்பாட்டிலில் எடுத்துச்சென்று காட்டியிருக்கிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட உயர் அதிகாரிகள் முன்னிலையில், தமது பகுதியில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடுகிறது என்று அமைச்சர் ஆற்காடுவீராச்சாமியிடம் முறையிட்டார். அந்த இளைஞரை காவல் துறையினர் மேடையில் இருந்து இழுத்து கீழே தள்ளி அடித்து உதைத்து தாக்கி இருக்கின்றனர்.
இரண்டு அமைச்சர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் முன்னிலையில் பொது மேடையில் கருணாநிதி ஆட்சியின் கள்ளச்சாராய சாம்ராஜ்யத்தைப் பற்றிஎடுத்துச் சொன்ன இளைஞரின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இளைஞர் ராஜாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் முதலமைச்சர் கருணாநிதிதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கையில் ஜெயலலிதாகுறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications