விமானப் படை தாக்குதலில் 9 கடல் புலிகள் பலி
கொழும்பு:
இலங்கை விமானப் படையினர் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 9 விடுதலைப் புலிகள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே நிருபர்களிடம் கூறுகையில், வடக்கு யாழ்ப்பாணம் அருகேயுள்ள பலாய் பகுதியில் கடற் புலிகள் மீதுஇலங்கை விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முன்னதாக வியாழக்கிழமை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ்சை, விடுதலைப் புலிகள் கண்ணி வெடி வைத்துத் தகர்த்தனர். இச்சம்பவத்தில் இறந்தராணுவ வீரர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது என்று தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தும், புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும்இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, அமைதிப் பேச்சுவார்த்தை குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ராணுவ வீரர்கள் தங்கள் தாக்குதலை நிறுத்தமாட்டார்கள் என்று திட்டவட்டமாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரபாகரன் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு நிபந்தனையற்றபேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இலங்கையில் 1983 ம் வருடம் முதல் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே போர் நடந்துவருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications