வீரப்பனிடமிருந்து தப்பியவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்
பெங்களூர்:
சந்தனமரக் கடத்தல் வீரப்பனால், கன்னட நடிகர் ராஜ்குமாருடன் கடத்தப்பட்டு, வீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்த நாகப்பா வியாழக்கிழமை பெங்களூர்உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட 4 பேர் வீரப்பனால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டு 61 நாட்களுக்கு பிறகு உதவி டைரக்டர் நாகப்பா வீரப்பனிடமிருந்துதப்பி வந்து விட்டார்.
தான் தப்பி வந்தது குறித்து அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வந்தார். இதனால் நாகப்பா நீதிமன்றத்தில் ஆஜராகி உண்மையானதகவல்களை தெரிவிக்க வேண்டும் என வயிற்று கட்சியை சேர்ந்த ரங்கசாமி ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
நாகப்பாவுக்கு பெங்களூர் உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமையன்றுபெங்களூர் உயர் நிதிமன்றத்தில் ஆஜாரானார். அவரிடம் அரை மணி நேரம் விசார ண நடந்தது.
பெங்களூரின் புறப்பகுசியான அம்ருதஹள்ளி பண்ணை வீட்டிலிருந்து பாதுகாப்புடன் நண்பகல் 12.30 மணிக்கு நாகப்பா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் நீதிபதி அசோக் பவன் முன்பாக அவர் வாக்கு மூலம் அளித்தார். ராஜ்குமார் குடும்பத்தினர் தன் மீது எந்த விதமான கெடுபிடியும் நடத்தவில்லை,தன்னை தாக்கவும் இல்லை, மிரட்டவும் இல்லை என தெரிவித்தார்.
நாகப்பா வாக்குமூலத்தை நீதபதி அறையில் அளித்ததால் பத்திரிக்கையாளர் எவரும் அனுமதிக்கப்படவில்லை. நாகப்பாவின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
வயிற்றுக் கட்சி ரங்கசாமி தாக்கல் செய்த ரிட் மனு மீது தான் சொல்ல வேண்டிய ஆட்சேபங்களை டிசம்பர் 14-ம் தேதி நாகப்பா நீதிமன்ற கவனத்திற்குகொண்டு வரலாம் என நீதிபதி தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications