கனமழை: முகாமுக்குத் திரும்பினர் அதிரடிப் படையினர்
சத்யமங்கலம்:
சத்யமங்கலம் காட்டுப் பகுதியில் அடைமழை பெய்வதால் சந்தன வீரப்பனை தேடும் பணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு முகாமிற்குத் திரும்பினர்.
வீரப்பனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிரடிப் படையினர் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் உள்ள குப்பனூர் என்ற இடத்தில் சந்தன வீரப்பன் கூட்டாளிகள் தங்கி சமையல் செய்து சாப்பிட்டதற்கான அடையாளங்கள்கிடைத்துள்ளது. அங்கு அரிசி, பருப்பு, ஆகியவை சிதறிக் கொட்டிக் கிடந்தன. மசாலா பொருட்கள் பொட்டலம் போட்டு வைத்திருந்த காகிதங்களையும்அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கன மழை:
தமிழகத்தில் புயலால் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஈரோட்டிலும் கடும் மழை பெய்தது. விடிய, விடிய மழை பெய்ததால்அதிரடிப் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அதிரடிப்படையினர் பண்ணாரி, திம்பம், ஆசனூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குத் திரும்பினர். இதனால் வீரப்பனைத் தேடும்முயற்சியிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications