திருச்சி தொகுதிக்கு யார் வேட்பாளர்?
சென்னை:
திருச்சி லோக்சபா தொகுதிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து வேட்பாளர் தேர்வுக் கமிட்டி அமைத்து முடிவு செய்யப்படும் என பாரதியஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி லோக்சபா தொகுதியில், அந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் இறந்து போன மத்திய அமைச்சர் ரங்கராஜன்குமாரமங்கலத்தின் தங்கை லலிதா குமாரமங்கலம் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இது பற்றி தமிழக பாரதிய ஜனதா தரப்பில் கூறப்படுவதாவது:
திருச்சி லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் நடைபெற இருக்கிறது. தலைமை தேர்தல் கமிஷன் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்தான்வேட்பாளர் யார் என முடிவு செய்யப்படும்.
பாரதிய ஜனதா வேட்பாளரை பொறுத்தவரையில் வேட்பாளர் தேர்வு கமிட்டி வேட்பாளரை தேர்வு செய்யும். அதற்கான கமிட்டியும் தேர்வுசெய்யப்பட்டும். அந்த கமிட்டி வேட்பாளரின் தகுதிகள் பற்றியும் மற்றும் அவர்களை பற்றிய மற்ற விவரங்களையும் தெரிந்து கொண்ட பின்வேட்பாளரை முடிவு செய்யும்.
பாரதிய ஜனதாவின் மாநில செயற்குழு இந்த மாதம் 15 மற்ரும் 16-ம் தேதி ஈரோட்டில் நடக்க இருக்கிறது. தேர்தல் கூட்டணி மேலும் கூட்டணிகட்சிகளிடம் எத்தனை இடங்கள் கேட்பது போன்ற விஷயங்களும் வேட்பாளர் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications