மெரினா கடற்கரையில் வேலி அமைக்க சிபாரிசு
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் தரை தட்டிய கப்பல் உள்ள பகுதியில் தடுப்பு வேலி அமைப்பது குறித்து அரசுபரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உச்ச நீதிமன்றம் சிபாரிசு செய்துள்ளது.
அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் சார்பில் மதிவாணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் சங்க கிளையின் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி சென்னை காமராஜர் சாலையில் இருந்துஅரசு தோட்டத்திற்கு உழைக்கும் வர்க்கத்தினர் ஊர்வலமாக சென்றனர்.
இதில் இளைஞர்களும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை சேர்ந்தவர்கள் மெரினா கடற்கரைக்கு சென்றனர். தரைதட்டிய கப்பல் இருக்கும் கடல் பகுதியில் குளித்த மூன்று பேர் உடைந்த கப்பலில் சிக்கி மரணம் அடைந்துவிட்டார்கள்.
தரை தட்டிய கப்பல் கிடக்கும் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும். அப்பகுதியில் எந்தவித எச்சரிக்கையும்இல்லை. மேலும், எந்த விதமான தடுப்பு வேலியும் இல்லை. இதனால் தான் இந்த ஆபத்து ஏற்பட்டது.
இறந்தவர்களில் ராஜேஷ் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜேஷ் வெல்டிங் வேலையை சேலத்தில்செய்து வந்தார்.
தினசரி ரூபாய் 125 தான் கிடைக்கும். இதை நம்பித் தான் அவர் தாயார் வாழ்க்கை நடத்தி வந்தார். ராஜேஷ்மரணத்தால் அவரது தாயார் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டார்.
எனவே, ராஜேஷ் மறைவுக்கு ஐந்து லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். என்று அரசுக்கு மனு அனுப்பினேன்.மேலும் தரை தட்டிய கப்பல் இருக்கும் பகுதியில் எச்சரிக்கை போர்டுகள் வைப்பதுடன், தடுப்பு வேலி அமைக்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தேன்.
கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி இந்த மனு அனுப்பப்பட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.ஆகவே பொது நலன் கருதி இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்.
ராஜேஷ் மரணத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும். மேலும் தரை தட்டிய கப்பல் பகுதியில்எச்சரிக்கை போர்டுகளும், வேலிகளும் அமைக்கும் படி நீதிமன்றம் உத்திரவிட வேண்டும் என்று மனுவில்குறிப்பிட்டிருந்தார்.
தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் நீதிபதி கே.சம்பத் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.
பொதுநலன் கருதி வழக்கு தொடர்ந்திருப்பதால் நஷ்ட ஈடு தர உத்திரவிட இயலாது என்று தீர்ப்புக் கூறியநீதிபதிகள், மெரினா கடற்கரையில் தடுப்பு வேலி அமைப்பது தொடர்பாக அனுப்பிய கோரிக்கை மனுவைசட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications