போர் நிறுத்தத்தை முறியடித்தனர் புலிகள்
கொழும்பு:
இலங்கையில் வடக்கு யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி போடுவதையொட்டி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை புலிகள்முறியடித்தனர்.
இதையடுத்து புலிகள், ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாமைத் தகர்த்தனர். இதில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இன்னொருவர் காயமடைந்தார்.
வடக்கு யாழ்ப்பாணத்தில் வாழும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி போட வேண்டும் என்று யூனிசெப் அறிவித்திருந்தது. இதையடுத்து ராணுவவீரர்களும், புலிகளும் டிசம்பர் 1 மற்றும் 2 ம் தேதிகளில் போர் நிறுத்தத்தைக் கடைபிடிப்பது என்று முடிவெடுத்தனர்.
போர் நிறுத்தம் முறியடிப்பு:
இருப்பினும், சனிக்கிழமை வடக்கு யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்திருந்த ராணுவ முகாமை, புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்ஒருவர் பலியானார். இன்னொருவர் காயமடைந்தார்.
எனினும், நாடு முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications