ரேடியோ வெங்கடேசனை விடுவிக்கா விடில் ரயில் நிலையம் தகர்க்கப்படும்
கோவை:
ரேடியோ வெங்கடேசனை வெளியில் விடா விட்டால், உடுமலை ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்றுவந்த மர்மக் கடிதத்தால், மடத்துக்குளம் போலீசார் பரபரப்படைந்தனர்.
ராஜ்குமார் கடத்தலின் போது வீரப்பன் விடுத்த பல்வேறு கோரிக்கைகளில் வெள்ளித் திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன்தாக்கப்பட்ட சம்பவத்தில், கைதான தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த ரேடியோ வெங்கடேஷன் உள்படநான்கு பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்று.
இந்தக் கோரிக்கை நிறை வேறாத நிலையில், தற்போது உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு மர்மக் கடிதம்வந்தது. அந்தக் கடிதம் தர்மபுரியிலிருந்து அஞ்சல் செய்யப்பட்டிருந்தது. இதனைப் பெற்றுக் கொண்ட உடுமலைரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், அதனைப் படித்து பார்த்தார்.
அதில், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த ரேடியோ வெங்கடேஷனை விடுதலை செய்ய வேண்டும்.அவ்வாறு 15 நாட்களுக்குள் விடுதலை செய்யாவிட்டால், உடுமலை ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் எனக்கூறப்பட்டிருந்தது.
இது குறித்து உடுமலை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் , பழனியில் உள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல்கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications