ஜடேஜா பற்றி பெர்னாண்டஸ் எதுவும் பேசவில்லை: உமாபாரதி
போபால்:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜடேஜாவை விடுவிக்குமாறு ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறவில்லை என மத்தியவிளையாட்டு துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஜடேஜாவை கிரிக்கெட் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பது குறித்து என்னை நிர்பந்திக்கவும் இலலை பேசவும் இல்லைஎன உமா பாரதி கூறியுள்ளார்.
அசாருதீன், ஜடேஜா, அஜய் ஷர்மா, மனோஜ்பிரபாகர், மோங்கியா ஆகியோர் மீது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிபிஐ யால் குற்றம்சாட்டப்பட்டது. அதை விசாரிக்க கிரிக்கெட் வாரியத்தால் விசாரிக்க அமைக்கப்பட்ட மாதவனும் உறுதி செய்தார்.
ஜடேஜாவை சூதாட்டக் குற்றத்திலிருந்து விடுவிக்குமாறு சமதா கட்சித் தலைவரும் மத்திய பாதுகாப்பத் துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் உமாபாரதியை வற்புறுத்துவதாக தகவல்கள் வந்தன. இதை உமாபாரதி மறுத்துள்ளார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூத்த தலைவர் என்பதால் நான் அடிக்கடி அவரை சந்திக்க செல்வேன். ஆனால் அவர் ஜடேஜாவைப் பற்றி எதுவும் என்னிடம்பேசவில்லை என கூறியுள்ளார்.
ஜடேஜா சமதா கட்சிதலைவரான ஜெயா ஜெட்லியின் மகளை சில மாதங்களுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டார். ஜடேஜா வீட்டில் வருமானவரித்துரை சோதனை நடத்தப்பட்டபோது ஜெயா ஜெட்லி வீட்டிலும் சோதனை நடந்தது. அதை அப்போதே ஜெயாஜெட்லி எதிர்த்தார்.
ஜெயா ஜெட்லி ஜடேஜாவை சூதாட்டக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு மத்திய அரசுக்கும் நெருக்கடி ஏற்படுத்தி வருவதாகவும கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications