மகளுக்கு பிக்பாக்கெட் திருமணம் செய்த அம்மா
கோவை:
பிக்பாக்கெட் அடித்தே குடும்பம் நடத்தி, மகளுக்குத் திருமணம் வரை செய்து கொடுத்த பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
பல நாள் திருடன், ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப, கோவையில் பிக்பாக்கெட் அடித்தே தொழில் நடத்தி அதில் வந்த வருமானத்தில்குடும்பம் நடத்தி வந்த பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை கணபதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (40). இவர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயது முதல் திருடியே சம்பாதித்து வந்து பழக்கமாகிக்கொண்டார். போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிச் செல்வது பற்றி கை வந்த கலையாகக் கற்றுக் கொண்டிருந்த இப் பெண், தொழிலை விடாமல் தொடர்ந்துசெய்து வந்தார்.
ஒரு முறை போலீசில் பிடிபட்டும் தப்பி ஓடி விட்டார். இந்நிலையில், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த இப் பெண், பல ஆண்டுகளாக "சம்பாதித்தபொருளைக் கொண்டு தனது மகளுக்கு சிறப்பாக திருமணம் முடித்து வைத்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பெண் குழந்தையுடன் பஸ்சில் சென்று பிக்பாக்கெட்டில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான பல வழக்குகள் பல போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து வருகிறது. எனவே இவரைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.இந்த போலீஸ் படையில் பெண் போலீசார் மட்டுமே இடம் பெற்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் போலீஸ், ஓடும் பஸ்சில் இறங்கிய தனலட்சுமியைக் கையும்களவுமாகப் பிடித்தார். விசாரணை செய்ததில் தான் நடத்தி வந்த தொழில் குறித்து விலா வாரியாக விவரித்துள்ளார்.
பல நாள் திருடி ஒரு நாள் அகப்பட்ட இந்த கில்லாடிப் பெண்ணைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.












Click it and Unblock the Notifications