பஞ்சாப் ரயில் விபத்து: நீதி விசாரணைக்கு உத்தரவு
சரைபஞ்சரா (பஞ்சாப்):
பஞ்சாப்பில் சனிக்கிழமை நடந்த ரயில் விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து:
பஞ்சாப் மாநிலம் அம்பாலா அருகே அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி 46 பேர் பலியானார்கள். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மம்தா விரைந்தார்:
விபத்து நடந்த இடத்தை ரயில்வே அமைச்சர் விரைந்து சென்று பார்வையிட்டார். அவருடன் இணை அமைச்சர் திக் விஜய் சிங்கும் சென்றிருந்தார்.
அங்கு நிருபர்களிடம் மம்தா கூறியதாவது:
ரயில் விபத்து குறித்து விபத்துக்குள்ளான ரயில்களின் டிரைவர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோர் கூறி உள்ள காரணம் முரண்பாடு உடையதாகஇருக்கிறது. அதிருப்தி அடைவதாகவும் இது உள்ளது.
விபத்துக்குக் காரணமானவர்கள் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும். விபத்துக்குப் பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்வது ரயில்வேதுறைக்கு சாதகமாக அமைவதானால் நான் ராஜினாமா செய்யத் தயார்.
இந்த விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
வாஜ்பாய், சோனியா இரங்கல்:
ரயில் விபத்து குறித்து பிரதமர் வாஜ்பாய் வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ரயில்வே இலாகாவுக்குத் தேவையான பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், ரயில் விபத்தில் ஏராளமானவர்கள் பலியானது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.
இது போன்ற ரயில் விபத்துக்கள் நடப்பது கவலையளிக்கிறது. ரயில் பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications