மம்தா ராஜினாமாவை நிராகரித்தார் வாஜ்பாய்
டெல்லி:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த சனிக்கிழமை நடந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர்மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ததை பிரதமர் வாஜ்பாய் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
கடந்த சனிக்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கூட்ஸ் ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர்மோதிக் கொண்டது. இவ் விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் வாஜ்பாயிடம், தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்மம்தா பானர்ஜி.
இதையடுத்து பிரதமர் வாஜ்பாய், சில தூதர்களை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டுக்கு அனுப்பிஅவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று கூற வைத்துள்ளார்.
2 வது முறையாக ராஜினாமா:
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தியது. இதை எதிர்த்து மம்தா பானர்ஜியும்,இணை அமைச்சர் அஜித் குமாரும் ராஜினாமா செய்தார்கள்.
பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு மறு பரிசீலனை செய்யும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்த பிறகுஇருவரும் தங்களது ராஜினாமாவை வாபஸ் பெற்றனர்.
முன்னதாக சனிக்கிழமை விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக மம்தா பானர்ஜி செல்லவில்லை.ஞாயிற்றுக்கிழமை தான் நேரில் சென்று விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.
அப்போது நிருபர்கள் அவரிடம் ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வீர்களா என்று கேட்டபோது,விபத்து நடக்க நான் காரணம் என்று கருதினால் நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.
முன்னதாகப் பஞ்சாப் மாநிலத்தில் இதே ரயில் பாதையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த மிகப் பெரியவிபத்தாகும் இது. இதே இடத்தில் 1998 ம் வருடம், நவம்பர் மாதம் ரயில் விபத்து ஏற்பட்டது. இதில் 200 பேர்கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications