டிசம்பர் 6: கருப்பு தினமாக அனுசரிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

1992 ம் வருடம் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல முஸ்லீம் அமைப்புகள் கருப்பு இந்த நாளை கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாபர் மசூதி 1992 ம் வருடம் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துசமீபத்திய வருடங்களில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் பஸ், ரயில் நிலையங்களில் குண்டு வெடிப்புச்சம்பவங்கள் ஏற்பட்டது.

இதையொட்டி இந்தியா முழுவதும் எந்த வித அசம்பாவிதச் சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாதென்று பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக மசூதிகள், கோவில்கள், சர்ச்சுகள், ரயில்நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

மும்பையில்:

மும்பையில் உள்ள அனைத்து மசூதிகளிலும், முஸ்லீம் அமைப்பினர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட 8 வது வருடமானபுதன்கிழமை சிறப்பு தொழுகைகள் நடத்தினர். மும்பையில் உள்ள மினரா மசூதியில் தேசிய ஒற்றுமையைஏற்படுத்தும் விதத்தில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது.

தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லீம்கள் அயோத்தியில் மீண்டும் பாபர் மசூதி எழுப்பப்பட வேண்டும் என்றுவலியுறுத்தினர்.

மேலும் அவர்கள் நடத்திய ஊர்வலத்தில் மசூதி இடிப்புக்குக் காரணமாகக் கூறப்பட்ட மத்திய அமைச்சர்கள்அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுகோஷமிட்டனர்.

இந்த ஊர்வலத்துக்கு மும்பை முஸ்லீம் லீக் தலைவர் முகமது பரூக் அசாம் தலைமை தாங்கினார்.

தலைநகரில்:

தலைநகர் டெல்லியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான புதன்கிழமை ஹிந்துக்கள் சஹார்யா திவாஸ் என்றபெயரில் விழா போல் கொண்டாடினர். ஆனால் முஸ்லீம்களோ இந்த தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்தனர்.

நாடாளுமன்ற அவை ஒத்திவைப்பு:

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் காரணமான 3 மத்திய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்என்று ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

கேள்வி நேரம் முடிந்ததும் இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்புங்கள் என்று மாநிலங்களவை தலைவர்கிருஷ்ணகாந்தி கூறினார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதைக் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

இருப்பினும் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர்ஜோஷி மற்றும் உமாபாரதி ஆகியோர் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் வாஜ்பாய்திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+