வருமானவரித் துறை கிடுக்கிப்பிடியில் வீரர்கள்
டெல்லி:
தங்களது வருமானத்தை கணக்கில் காட்டாமலம் மறைத்து வரும் கிரிக்கெட் வீரர்கள் யாரும் எஙகளிடம் இருந்து தப்ப முடியாதுஎன வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீனுக்கும், அஜய்ஷர்மாவுக்கும் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என தடை விதித்தது.
அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் ஆகிய இரண்டு பேரும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடக்கூடாது எனவும் கிரிக்கெட்வாரியம் தெரிவித்தது. இந்நிலையில் அவர்கள் கணக்கில் காட்டாமல் குவித்து வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்து விசாரணைசெய்து அறிக்கைகள் அனுப்பி அவர்களுக்கு கிடுக்கி பிடி போட்டிருக்கிறது வருமானவரித்துறை.
கடந்த ஜூலை மாதம் 20 மற்றும் 21-ம் தேதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள், மேட்ச் ஃபிக்சிங் தொடர்பாக 90 கிரிக்கெட்வீரர்கள் வீடுகளை சோதனையிட்டனர். இந்தச் சோதனை ஒரே நேரத்தில் டெல்லி, சண்டிகர், கல்கத்தா, பெங்களூர், அகமதாபாத்,ஹைதராபாத் நகரங்களில் நடந்தது.
இந்தச் சோதனை வருமான வரித்துறை அதிகாரரிகளுக்கே தாங்கள் யார் வீட்டை சோதனையிடப் போகிறோம் என தெரியாமல்ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனையின்போது தான், கபில்தேவிடம் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக கணக்கில் காட்டப்படாத சொத்துகள் இருப்பதும், அஜய்ஜடேஜாவிடமும், மனோஜ் பிரபாகரிடமும் 2 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் இருக்கின்றனஎன்பதும், அஜய் ஷர்மாவிடமும், நிகில் சோப்ராவிடமும் ரூ. 1 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத சொத்த்துக்கள்இருக்கின்றன என வருமான வரித்துறையினருக்குத் தெரியவந்தது.
தங்களது வருமானத்தை கணக்கில் காட்டாமலம் மறைத்து வரும் கிரிக்கெட் வீரர்கள் யாரு தப்பிக்க முடியாது எனவருமானவரித்துறை இயக்குனர் டெல்லியில் புதன்கிழமை பரீஜா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
தங்கள் வருமானத்தை கணக்கில் காட்டாதவர்கள் குறித்து புலனாய்வு முடிவு பெற்று விட்டது. இது குறித்த அறிக்கைகள் அந்ததந்தகிரிக்கெட் வீரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகங்களுக்கு விரைவில் அனுப்பப்பட்டுவிடும்.
முகமது அசாருதீனுக்கும் அவரது மனைவி சங்கீதா பிஜ்லானிக்கும் ஹைதராபாத்திலிருககும் அதிகாரி மூலமாக அறிக்கைகள்அனுபப்பட்டு விட்டன.
நவஜோத் சிங்கிற்கும் 10 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பப்பட்டுவிடும்,. அநத் அறிக்கை அவர் வசிக்கும் பகுதியானபட்டியாலா அலுவலகம் மூலமாக அனுப்பப்படும்.
தற்போது நாங்கள் டெல்லியில் வசிக்கும் கிரிக்கெட் வீரக்ளுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகளில கவனம் செலுத்திவருகிறோம். அதுவும் முடியும் தருவாயில் இருக்கிறது.
7 அல்லது 8 நாட்களில் டெல்லியில் வசித்துவரும் கபில்தேவ், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர். அஜய் ஷர்மா, நிகில் சோப்ராபோன்றோரின் மீதான அறிக்கைகளை வருமானவரியை மதீப்பீடு செய்யும் அதிகாரிக்ளுக்கு அனுப்பி வைப்போம்.
தனது கணக்குகளை ஒப்படைத்தபின் அவர்கள் கணக்கில் காட்டாமல் வைத்திருந்த வருமானத்தின் மீதான 60 சதவிகிதம் வரியைஉடனடியாக கட்ட வேண்டும். எந்த கிரிக்கெட் வீரரும் எங்களிடமிருந்து தப்ப முடியாது. அவர்கள் தவறான தகவல்களைஅளித்தாலோ அல்லது மறைக்க முயன்றாலோ அதற்கான தண்டனையை பெறுவார்கள்.
அவர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டு வரையில் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். தண்டனையும்தாமதப்படுத்தப்படாமல் உடனே அளிக்கப்படும்.
கிரிக்கெட் வீரர்ரகள் கணக்கில் காட்டாமல் இருக்கும் சொத்துக்கள், வருமானங்கள் குறித்து மதிப்பீடு செய்வது எங்கள் முதல்வேலை. அதன் பின்பு சூதாட்ட ஏஜென்டுகள் பற்றியும் அதிகாரிகள் பற்றியும் விசாரிக்க தொடங்குவோம் என்றார்.
சில கிரிக்கெட் வீரர்கள் வருமானத்துறை படிவங்களை சமர்பிக்கவே இல்லை, அவர்களில் அஜய் ஷர்மா குறிப்பிடத்தக்கவர்.அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications