விடுதலைப் புலிகள் விவகாரம்: புதுவை சட்டசபையில் கூச்சல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கூட்டுறவுத் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமாருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் ரகசியத் தொடர்பு உள்ளது என்று அமைச்சர் கண்ணன் கூறியவிவகாரம் புதுவை சட்டசபையில் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் (மனோகர் அணி) எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் கண்ணன் ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர்.
வியாழக்கிழமை காலை சட்டசபை கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் ஜானகிராமன் (திமுக), அமைச்சர் தேனி ஜெயக்குமாருக்கு, விடுதலைப் புலிகளுடன்உள்ள தொடர்பு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் சுப்ரமணியத்திடம் கூறினார்.
உடனே அவர் சமீபத்தில் ஏற்பட்ட புயல் சேதம் குறித்து விவாதிக்கப்பட்ட பின்தான் பிற விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் சண்முகம், தேனி ஜெயக்குமாருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும். மேலும் இந்த விஷத்தில் ஆதரங்கள் இருந்தால் அதை புதுவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்றார்.
இதையடுத்து தேனி ஜெயக்குமாரும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் ஒன்றாகச் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை அமைச்சர் கண்ணன்முதல்வர் சண்முகத்திடம் கொடுத்தார்.
முன்னதாக, இப்பிரச்சனை குறித்து சபாநாயகர் விவாதம் செய்ய மறுப்பு தெரிவித்ததையடுத்து அமைச்சர் கண்ணன் மற்றும் மனோகர் பிரிவுஎம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்புச் செய்தனர். தொடர்ந்து திமுக உறுப்பினர்களும் தொடர்ந்து வெளிநடப்புச் செய்தனர்.
அமைச்சர் கண்ணன் மற்றும் மனோகர் அணி தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தினர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications