இந்தியா-புலிகள் உறவு: நெடுமாறன் கோரிக்கை
மதுரை:
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு உதவ வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் புதன்கிழமை கூறினார்.
மதுரையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஈழத் தமிழர் பிரச்சனையில் ராஜீவ் காந்தியின் பழைய கொள்கைகளை விட்டு விட வேண்டும். விடுதலைப் புலிகளுடன் சுமூக உறவை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இந்திரா காந்தி காலத்தில் ஈழத்தமிழர்கள் மீது அனுதாபம் இருந்தது. ஆனால் ராஜீவ்காந்தி காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அனைவரும்செயல்பட்டனர்.
புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சுமூக உறவு ஏற்படும் வகையிலும், இனப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணும் வகையிலும் நார்வேதூதுக்குழு இறங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி கொள்கைகளை ஆதரிப்பது தவறு என்று தான் புதிய ஆட்சியை மக்கள் கொண்டு வந்துள்ளனர். எனவே மத்திய அரசுஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடத் தயக்கம் காட்டக் கூடாது.
நார்வே நாடு எடுத்து வரும் முயற்சிகளுக்கு இந்தியா முழுஉதவியும் செய்ய வேண்டும். பேச்சுவார்த்தைக்கும், அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கும் இந்தியாமுக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்சனை:
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள்நிகழாமல் ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரப்பன் விவகாரம்:
வீரப்பன் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தே வீரப்பன்விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் நெடுமாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications