ஸ்தம்பித்துப் போனது இந்திய தபால் துறை: லட்சக்கணக்கான கடிதங்கள் தேக்கம்
டெல்லி:
தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோருக்கிடையே நடந்தபேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 2 வது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்தது.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.
நாடு முழுவதும் 6 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தபால் பணிகள் ஸ்தப்பித்துள்ளன. டெல்லி, மும்பை, கல்கத்தாஉள்பட அனைத்து மாநிலங்களிலும் தபால்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
அமைச்சருடன் சந்திப்பு:
இதற்கிடையே புதன்கிழமை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும், தபால் துறை தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசினர். அந்தப் பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தை முடிந்ததும் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில்,
தபால் ஊழியர்கள் கூறுவது போல், புற நிலை ஊழியர்களை அலுவலக ஊழியர்களாக அறிவிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. அவர்களுக்கு ஓய்வூதியம்வழங்குவதாலும் பிரச்சனைகள் ஏற்படும்.
தல்வார் கமிட்டி பரிந்துரைகள் குறித்து விவாதித்து சுமூக முடிவு காண அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். தபால் பணிகள் கடுமையாகஸ்தம்பிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார்.
பாரதிய தபால் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் யாதவ் கூறுகையில், எங்களது சில கோரிக்கைகளை மட்டுமே அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படும் வரை நாங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம் என்றார்.
திங்கள் முதல் வேலை நிறுத்தம்:
தேசிய தபால் ஊழியர்கள் சம்மேளனம், தேசிய தபால் ஊழியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த 6 லட்சம் தபால்ஊழியர்கள் கடந்த திங்கள்கிழமை மாலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் அலுவலகத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வரும் ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் மற்றும் காலியிடங்களை உடனடியாக நிரப்புவதுஆகியவை தபால் ஊழியர்களின் கோரிக்கைகளில் முக்கிய அம்சமாகும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications