வாஜ்பாய் பேச்சு: நாடாளுமன்றத்தில் பெரும் அமளி
டெல்லி:
அயோத்தி பிரச்சனை குறித்து பிரதமர் வாஜ்பாய் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தின்இரு அவைகளிலும் எதிர்க் கட்சிகள் பெரும் பிரச்சனையைக் கிளப்பின. இதையடுத்து லோக்சபாவும் ராஜ்யசபாவும்ஒத்தி வைக்கப்பட்டன.
வாஜ்பாய் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி ஒரு தேசிய உணர்வாகும். இந்தப் பணி இன்னும் நிறைவடையவில்லைஎன வாஜ்பாய் கூறியிருந்தார்.
வாஜ்பாய் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க் கட்சியினர் குரல் கொடுக்க இதை எதிர்த்து பாரதிய ஜனதாகட்சியினர் குரல் கொடுத்தனர். இதனால் அவைகளில் பெரும் அமளி நிலவியது. ஒரே கூச்சலும் குழப்பமும்காணப்பட்டது.
கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களும் எழுந்து நின்று கத்திக் கொண்டும், குரல் எழுப்பிக் கொண்டும் இருந்தனர்.
அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் பாலயோகி எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதையடுத்துலோக் சபாவை அவர் ஒத்திவைத்தார்.
ராஜ்யசபா:
ராஜ்யசபாவில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே எம்.பிக்கள் வாஜ்பாய்க்கு எதிராக குரல் எழுப்பஆரம்பித்துவிட்டனர். பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடைய அத்வானி, உமா பாரதி, முரளிமனோகர் ஜோஷிஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஆளுந் கட்சியினருக்கும் எதிர்க் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவை நாளைவரை ஒத்தி வைக்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications