அசாருக்கு பாங்க் வேலை பறிபோகுமா?
ஹைதராபாத்:
மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட அசாருதீனை உடனடியாக வேலையில் வந்து சேருமாறு பாரத ஸ்டேட் வங்கிஉத்தரவிட்டுள்ளது.
அசாருதீன் தேசிய மயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியில் மக்கள் தொடர்பு பிரிவின் முதன்மை மானேஜராக பணியாற்றி வருகிறார். விளையாட்டுவீரர்களுக்கு பணயில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவது உண்டு.
விளையாட்டு போட்டிகள் நடக்கும் நாட்களிலும், பயிற்சி இருக்கும் நாட்களிலும் அவர்கள் பணிக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது. அசாருதீன் இந்தியகிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்ததால் அவர் பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
சி.பி.ஐ. அவர் மீது குற்றம் சாட்டிய பின் அவர் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தார். தற்போது கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள்முழுவதும் கிரிக்கெட் விளையாடக் கூடாது என தடை விதித்துள்ளது. இனி அவர் கிரிக்கெட் விளாைட முடியாது என்பதால் அவரை உடனே பணிக்குவருமாறு பாரத ஸ்டேட் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி பாரத ஸ்டேட் வங்கியின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
அசாருதீன் இந்தியா சார்பில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காததால் அவரை பணிக்க வருமாறு உத்தரவிட்டுள்ளோம்.
அவர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றால் அது குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டிருந்தோம். அவரிடமிருந்து எந்த பதிலும்வராததால் அவரை உடனே பணிக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளோம்.
அசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கிரிக்கெட் வாரியத்திடமிருந்தோ அல்லது சி.பி.ஐ.யிடமிருந்தோ எங்களுக்கு எந்த வித அறிக்கையும் வரவில்லை. அதுபோல் அறிக்கை வந்தால் மட்டுமே அசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications
