மதத்தின் அடிப்படையில் அசாருக்கு தண்டனையா?
டெல்லி:
அசாருதீனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மத அடிப்படையில் வழங்கபட்டது என ஃபதேபுரி மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் அசாருதீனுக்கும், அஜய் சர்மாவுக்கும் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக வாழ் நாள்முழுவதும் கிரிக்கெட் விளையாடக் கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.
அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் ஆகியோருக்கு 5 ஆண்டு கால தடையும் கிரிக்கெட் வாரியம் விதித்தது.
இது மதத்தை மனதில் கொண்டு அளிக்கப்பட்ட தண்டனை என ஃபதேபுரி மசூதியின் நாயிப் ஷாஹி இமாம் முகமது மவுசம் அகமது கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பாவது:
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது சரி. ஆனால் தண்டனையை உறுதி செய்வதில் பாரபட்சம், பிரிவினை நடத்தை இருப்பதாக சந்தேகம்வரக்கூடாது.
குற்றம் செய்த பல பெரிய வீரர்களை காப்பாற்ற அசாருதீன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அசாருதீனை காப்பாற்றுவதுஎங்கள் நோக்கம் கிடையாது.
ஆனால் அதே சமயம் சட்டம் தன் கடமையைச் செய்யும் போது குற்றம் செய்த அனைவருக்கும் சமமான தண்டனை தரப்பட வேண்டும் என்பது எங்கள்எதிர்பார்ப்பு.
அசாருதீனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மதத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தை சமமாக உபயோகப் படுத்தாவிட்டால் இந்த நாட்டில்பிறப்பின் அடிப்படையால் இரண்டாம் இடத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக நாங்கள் நடத்தப்படுகிறோமோ என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்படுகிறதுஎன தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications