டிச. 12 ல் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சென்னை:
மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து, மின்வாரியத் தொழிலாளர்கள் இந்தமாதம் 12-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில்ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் பஞ்சரத்தின,தமிழக மின்வாரிய பொறியாளர் கழக பொதுச் செயலாளர்சிவப்பிரகாசம் இருவரும் இணைந்து வியாழக்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்
பேட்டியில் அவர்கள் கூறுகையில், தற்போது நடைபெற்று வரூம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மின்சார மசோதா 2000 கொண்டு வரப்படும் எனமத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த மசோதா கொண்டு வரப்பட்டால் நாட்டில் இருக்கும் 22 மின்வாரியங்கள் தனியார்மயமாகிவிடும்.
மின்வாரிய ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தனியார் லாப நோக்கத்துடன் செயல்படுவதால் மின்சார கட்டணம் அதிகமாகும். பல கஷ்டங்களும்ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு மின்சார மசோதா கொண்டு வருவதை கண்டித்து இந்த மாதம் 12-ம் தேதி நாடு முழுவதும் மின்சார ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் இருக்கும் 10 சங்கங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது என ஆற்காடு வீராசாமி கூறியுள்ளதால் எங்கள் போராட்டம் மத்திய அரசை எதிர்த்துத்தான்.
மத்திய அமைச்சர் மாநில அரசின் ஒப்புதல் பெற்று புதியமசோதா நிறை வேற்றப்படும் என கூறியுள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.
தற்போது அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் மின் விநியோகம் பாதிக்கப்படாது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications