அசாமை விட்டு ஓடும் ஹிந்தி பேசும் மக்கள்
கவுஹாத்தி:
அசாம் மாநிலத்தில் வசிக்கும் ஹிந்தி மொழி பேசும் மக்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பயந்து அசாமை விட்டுஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
6 வாரங்களில் மட்டும் ஹிந்தி மொழி பேசும் மக்கள், உல்பா தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளதுஇதற்குச் சிறந்த சான்றாகும்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், டின்சுகியா மாவட்டத்திலுள்ள குக்குர்மாரி பகுதியில் சென்று கொண்டிருந்த 3லாரிகளை உல்பா தீவிரவாதிகள் மறித்துக் கண்மூடித்தனமாகச் சுட்டனர். இச்சம்பவத்தில் 28 பேர் பலியானார்கள்.இச்சம்பவம் வியாழக்கிழமை நடந்தது. தாக்குதலில் உயிரிழந்தோர் அனைவரும் ஹிந்தி மொழி பேசுபவர்கள்.
இச்சம்பவத்தில் காயமடைந்த 2 பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது. தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டதீவிரவாதிகள் ஈடுபட்டனர்.
ஆறு வாரத்தில் நூறு பலி:
இங்கு கடந்த ஆறு வாரங்களில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட மக்கள், உல்பா தீவிரவாதிகளால் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஹிந்தி மொழி பேசும் மக்கள். பெரும்பாலானோர் பிகாரைச்சேர்ந்தவர்கள். தவிரவும் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வியாபாரம் செய்வதற்காக அசாம் மாநிலம் வந்தவர்கள்.
முதல்வர் கருத்து:
அசாமில் உல்பா தீவிரவாதிகளால் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து முதல்வர் பிரபல்ல குமார் மேத்தாகூறுகையில், அசாமில் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு உல்பா தீவிரவாதிகளே காரணம். அரசியலில் குழப்பத்தைஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அடுத்த வருடம் நடக்கவுள்ள தேர்தலுக்கு முன் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் அவர்கள்தங்களது அராஜகத்தைக் காட்டி வருகின்றனர் என்றார்.
டெல்லி விரைந்தார் முதல்வர்:
இதற்கிடையே முதல்வர் பிரபல்ல குமார் மேத்தா வியாழக்கிழமை டெல்லி விரைந்தார். அங்கு மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானியை சந்தித்து அசாமில் உள்ள பதட்ட நிலை குறித்து தெரிவித்தார்.
மேலும் அசாம் மாநிலத்தில் நடக்கும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு இன்னும் அதிகபோலீஸ் அதிகாரிகளை அசாம் மாநிலத்திற்கு நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அசாமை விட்டு ஓடும் ஹிந்தி பேசும் மக்கள்:
அசாமில் ஒரு கும்பல் அஸ்ஸாம் மாநிலத்தவர் அல்லாதவர்களைக் குறி வைத்துத் தாக்கி வருகிறது. இங்குராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வியாபாரத்திற்காக வருகிறார்கள்.
அசாம் மாநிலம் எங்களுக்கு மட்டுமே சொந்தம். இங்கு வேறு மாநிலத்தவருக்கு இடமில்லை என்று புரட்சிக்கும்பல்ஒன்று இவர்களை குறி வைத்துப் படுகொலை செய்து வருகிறது.
இதனால், இங்கு வாழும் ஹிந்தி மொழி பேசும் வேறு மாநில மக்கள் இங்கிருந்து ஓடும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications