நெல்லை: திமுக வில் சேர்ந்த தமாகா கவுன்சிலர்கள்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
தமிழ் மாநில காங்கிரஸ் கவுன்சிலர்கள் இருவர் அந்தக் கட்சியிலிருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில்தி.மு.க.வில் இணைந்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலின்திருநெல்வேலி வந்திருந்தார்.
பாளையங்கோட்டையில் .தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவுடையப்பன் இல்லத் திருமண விழாவிலும் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட திருநெல்வேலி மாவட்ட தமிழ் மாநில கவுன்சிலர் காமராஜ், வைகுண்டராஜ்ஆகிய இருவரும் ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து தி.மு.க.வில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications