சேலம்: பெண்ணை மயக்கி 200 பவுன் நகை கொள்ளை
சேலம்:
தனியாக இருந்த பெண்ணை மயக்கமடையச் செய்து ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 200 பவுன் நகையைக்கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலத்தில் உள்ள செவ்வாய் பேட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்திவருகிறார். இவரது மனைவி சுகந்தி. இருவருக்கும் பத்து வயதில் ராஜ்குமார் என்ற மகனும் உள்ளார்.
இந்நிலையில் சீனிவாசன் வெளியூர் சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கும்பல்சதித் திட்டம் தீட்டியது. அவரது வீட்டிற்கு காரில் சென்று இறங்கினர். சுகந்தியிடம் சீனிவாசன் இருக்கிறரா? எனவிசாரித்துள்ளனர். சுகந்தி, இல்லை வெளியூர் சென்று விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
சரி தண்ணீர் கொடுங்கள் எனக் கேட்டுள்ளனர். சுகந்தியும் சமையலறைக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளார்.அந்த சமயம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், ஒரு வித மயக்க மருந்தைப் பயன்படுத்தி சுகந்தியைமயக்கமடையச் செய்தனர்.
பின்னர், ராஜ்குமாரை கத்தியால் மிரட்டி பீரோவின் சாவியை எடுத்தனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 200 பவுன்நகையை எடுத்துக் கொண்டு காரில் பறந்து விட்டனர்.
இந்த நகையின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். மயக்கம் தெளிந்தவுடன் சுகந்தி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications