ஊழலை ஒழிக்க ஒரு கருத்தரங்கு: சண்டிகரில் நடக்கிறது
சண்டிகர்:
நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் ஊழலை ஒழிக்கவும், நடக்கும் ஊழல்கள் குறித்து கண்டுபிடிக்கும் வகையிலும் கருத்தரங்கு ஒன்றை நடத்த ஹரியானாமாநில புலனாய்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கருத்தரங்கு தலைநகர் ஹரியானாவில் டிசம்பர் 18 ம் தேதி நடக்கிறது. இந்தக் கருத்தரங்கில் மத்திய விஜிலன்ஸ் பிரிவு கமிஷனர் விட்டல், முன்னாள் சிபிஐஇயக்குநர் ஜோகிந்தர் சிங், கம்யூனிச தலைவர் சத்யபால் திங் ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.
ஹரியானா மாநில முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா கருத்தரங்கைத் தொடங்கி வைப்பார். இது குறித்து மாநில போலீஸ் அதிகாரி மாலிக் கூறுகையில்,இந்தக் கருத்தரங்கில் பத்திரிக்கையாளர் ஹரி ஜெய், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பாம்ப்ரி மற்றும் பலர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்வார்கள்.
இந்தக் கருத்தரங்கில் ஊழல், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டிய தண்டனைகள் ஆகியவைகுறித்து விவாதிக்கப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications