பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
கோவை:
கோவை, ஈரோடு மாவட்டங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் தேசிய பஞ்சாலைக் கழகத்திற்குச் சொந்தமாக 10 மில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மில்களில்உள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளிக்கு ஒப்பந்தம் செய்தபடியோ, அறிவித்தபடியோ போனஸ் அளிக்கவில்லை. எனவே, உரிய நேரத்தில்போனஸ் அளிக்கத் தவறினாலும், தற்போது நிலுவையில் உள்ள போனஸ் தொகையை விரைவாக வழங்கவேண்டும். கடந்த 96ம் ஆண்டு முதல் 99 ம் ஆண்டு வரையிலான போனஸ் மற்றும் சம்பளத்தில் பிடித்தம்செய்யப்பட்ட தொகையை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள என்.டி.சி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஒருநாள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications