வறுமையால் குடும்பமே தற்கொலை முயற்சி
ஈரோடு:
பணக் கஷ்டம், மனக் கஷ்டம் சேர்ந்தால் பெற்ற குழந்தைகளுக்குக் கூட விஷம் கொடுக்கும் நிலை ஏற்படும். நாமக்கல் அருகே டீயில் விஷத்தைக்கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து தானும் குடித்தாள் தாய். இதில் ஆறு வயது குழந்தை இறந்து போனது.
நாமக்கல் அருகே உள்ள பள்ளிபாளையம், தோட்டக்காட்டில் உள்ள அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் ராஜூ (40). வேன் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவருக்கு மாரியம்மாள் (37) என்ற மனைவியும், 5 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மாரியம்மாள் 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
ஐந்து குழந்தைகளில் தங்கப்பொண்ணு (18) சாயப்பட்டறையில் வேலை பார்த்த வருகிறார். செங்கோட்டையன் (12), விஜயகுமார் (7), பிரியா (6), மகேந்திரன்(3), ஆகிய குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் செங்கோட்டையனையும் வேலைக்கு அனுப்ப வேண்டும் என ராஜூ தெரிவித்துள்ளார். வேலைக்குப் போக மறுத்த செங்கோட்டையனை ராஜூஅடித்துள்ளார்.
இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பணக் கஷ்டத்தால் ராஜூ தவித்தார். இதனால் ஏற்பட்ட சண்டையால்மாரியம்மாள் வேதனையுற்றார். இதனால் விரக்தியடைந்த மாரியம்மாள், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இந்த முடிவையடுத்து அனைவரும் வீட்டில் இருந்த சமயத்தில் ராஜூ வேலைக்குச் சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டமாரியம்மாள், அருகில் இருந்த கடையில் டீ வாங்கி வரும்படி தனது தங்கப் பொண்ணை அனுப்பியுள்ளார்.
அவர் டீ வாங்கி வந்து வீட்டில் வைத்து விட்டு டம்ளரைத் தேடி எடுக்கச் சென்றுள்ளார். இந்த சமயம் பார்த்து மாரியம்மாள் டீயில் விஷத்தைக் கலந்துவிட்டார். இதில் தந்தையிடம் அடி வாங்கிய கோபத்தில் இருந்த செங்கோட்டையன் டீயைக் குடிக்க மறுத்து விட்டார். டீயைக் குடித்த மற்ற அனைவரும் மயங்கிவிழுந்து விட்டார்.
இதையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவரையும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பிரியா (6), மருத்துவமனைக்குச்செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
மற்ற அனைவரும் ஆபத்தான நிலையில் ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications