கைதிகளுக்கு வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கிராமங்களிலும், நகரங்களிலும் நடத்தப்பட்டு வரும் வரும் முன் காப்போம் மருத்துவ முகாமை சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் நடத்ததமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழக அரசு வரும் முன் காப்போம் என்ற மருத்துவ முகாமை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. இது ஒரு வருடமாக நடந்து வருகிறது.
இதன் முலம் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் பயன் அடைந்துள்ளனர். இந்த முகாம்கள் ஜனவரி மாத இறுதிக்குள் நகரங்களில் நடத்திமுடிக்கப்பட்டுவிடும்.
அதன் பின் இந்த முகாம் மத்திய சிறை மற்றும் சிறைகளில் இருக்கும் கைதிகளுக்காக நடத்தப்படும். கைதிகளுக்கு இருக்கும் நோய்களையும், தொற்றுநோய்களையும் தடுக்கும் விதமாக இந்த முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications