“எ.வ.வேலு வந்துட்டாரே.. விசாரிப்பதில் என்ன பிரச்னை?" தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீதான லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ. வேலு. அந்தக் கால கட்டத்தில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டும் எந்த இடத்திலும் பணிகளே நடைபெறாத நிலையில், முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது.

EV Velu Supreme court tvk

தமிழ்நாட்டில் புதிதாக தவெக அரசு அமைந்த பின் எ.வ.வேலு, தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 25ஆம் தேதி எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதற்கிடையே அவர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றதால் அவரை தேடப்படும் நபராக அறிவித்து போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

தனக்கு எதிரான வழக்கையும், லுக்-அவுட் நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூலை 28-ந் தேதி வரை, எ.வ.வேலு மீது எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்​முறை​யீடு மனுவை செவ்​வாய்​கிழமை (நேற்று) விசா​ரிக்க வேண்​டும் என்று முறை​யிடப்பட்டது. உயர் நீதி​மன்ற உத்​தர​வில் தெளிவு பெற உயர் நீதி​மன்​றத்​தையே நாடலாம் என்று முதலில் தெரி​வித்த தலைமை நீதிப​தி, பின்​னர் தமிழ்​நாடு அரசின் மனுவை புதன்​கிழம விசா​ரிப்பதாகத் தெரி​வித்​தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு கொடுக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை இடைக்காலமாக நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

சிங்கப்பூர் சென்றிருந்த எ.வ.வேலு தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்துவிட்டாரே நீங்கள் அவரை விசாரிக்கலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர், எ.வ.வேலு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு உத்தரவுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+