Aadi Month: ஆடியில் ஆச்சர்யம்.. கன்னி ராசிக்கு கூரையை பிச்சுட்டு கொட்டும் லாபம்
ஆடி மாத ராசிபலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர். சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் கன்னி ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்திற்கு இது சகல நற்பலன்களையும் கொடுக்கும் அற்புதமான மாதம். பண வரவு தாராளமாக இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். பொருளாதாரம் ஏற்றமடையும். உத்யோகம், தொழிலில் உயர்வு உண்டு. லாபம் பல மடங்கு அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் ஆச்சர்யமான பலன்கள் கிடைக்கும். தடைகள் நீங்கி பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.
புதிய முயற்சி
உத்யோகத்தில் மாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலைகள் கிடைக்கும். சூரியன் 11வது இடத்தில் இருப்பதால் இந்த மாதம் நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். எந்த காரியத்தில் இறங்கினாலும் வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். ஆடி மாதம் என்று நல்ல விஷயங்களை தள்ளி போட வேண்டாம். புதிய முயற்சிகளால் பெரிய ஏற்றம் நிச்சயம் காணப்படும். உங்களின் செல்வாக்கு உயரும். வார்த்தைக்கு மதிப்புக்கூடும்.
சொத்து
மனதில் குறைகள் நீங்கி தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் நீண்ட காலமாக தீராமல் இருந்த பிரச்சனைகள் எல்லாம் இப்போது சரியாகும். பிரிந்த கணவன் மனைவி இணைவார்கள். குழந்தைகள் விஷயத்தில் இருந்த குறைகள் நீங்கும். அவர்களின் கல்வி ஏற்றமடையும். சுப காரிய தடைகள் விலகி நல்ல செய்தி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் போன்ற அசையும், அசையா சொத்து சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்க தொடங்கும். குடும்பத்தில் புதிய வரவு இருக்கும்.
கவனம்
குரு ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அன்னதானம் அவசியம் செய்ய வேண்டும். உங்களுக்கு கழுத்து, முதுகு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சியை தவறாமல் கடைபிடிக்கவும். கோலார்பதியை அடிக்கடி உச்சரிப்பதால் பெரும் மாற்றங்கள் ஏற்படும். வீட்டின் அருகில் உள்ள விநாயகர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications