பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் புதிய நிபந்தனை
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தவும் இலங்கை அரசுக்கு, விடுதலைப் புலிகள் புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 17 வருடங்களாக தனி ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர். இலங்கை இனப்பிரச்சனையை விரைவில் முடிவுக்குக்கொண்டு வர நார்வே, இங்கிலாந்து போன்ற நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
நார்வே சமரசக் குழு:
சமரசத்தின் முதல் கட்டமாக நார்வே நாட்டுத் தூதுக்குழு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினர். இலங்கை அரசையும் அவர்கள்சந்தித்துப் பேசினர்.
பிரபாகரன், நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம்மிடம் பேசுகையில், சமரசப் பேச்சு வார்த்தைக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகக்கூறினார்.
புதிய நிபந்தனை:
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை இலங்கை அரசு நீக்கினால்தான் சமரசப் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்று புலிகள்புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.
லண்டனில் உள்ள விடுதலைப்புலிகள் ஆலோசகர் பாலசிங்கம், நார்வே அரசு மூலம் இந்த நிபந்தனையை இலங்கை அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைச்சர்:
விடுதலைப்புலிகள் அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் விடுதலைப்புலிகளுக்கு இலங்கை தவிர, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications