தபால் ஊழியர் வேலைநிறுத்தம் தொடர்கிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் தபால் ஊழியர்கள்போராட்டம் திங்கள்கிழமை 7 வது நாளாகத் தொடர்ந்தது.

தேசிய தபால் ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் பட்டாச்சாரியா கூறுகையில், எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்வரை வேலைநிறுத்தம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

நாடு முழுவதும் 6 லட்சம் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாரதிய தபால் ஊழியர்கள் சம்மேளனம்,தேதிய தபால் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்குவர்.

ஊதிய உயர்வு, பகுதி நேர ஊழியர்கள் 3 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் மற்றும் காலியிடங்களை உடனடியாக நிரப்புவது ஆகிய கோரிக்கைகள்முக்கயமானதாகும்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்:

இதற்கிடையே, தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்பது குறித்துவிளக்கம் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு, ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீசுக்கு வரும் 13 ம் தேதிக்குள் பதில் அளிக்கக் கோரியும் ஹைகோர்ட் கூறியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+