வாஜ்பாய் பிறந்த நாளை சமூக சேவை தினமாக கொண்டாடுகிறது பா.ஜ.க.
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயின் 76 வது பிறந்தநாளை இந்த வருடம் சமூக சேவை தினமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாக பாரதிய ஜனதாக் கட்சிபுதன்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதாக் கட்சி செய்தித்தொடர்பாளர் விஜய குமார் மல்ஹோத்ரா கூறுகையில், பிரதமர் வாஜ்பாயின் 76-வது பிறந்தநாள் வரும் டிசம்பர்25 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தப் பிறந்த நாள் விழாவை பிரதமர் வாஜ்பாய் சமூக சேவை தினமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, பிரதமரின் பிறந்ததினம் சமூகசேவை தினமாகக் கொண்டாடப்படும். இதையொட்டி இந்தியா முழுவதும் ரத்த தான முகாம்கள் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவும்முகாம்கள் நடத்தப்படும் என்றார் மல்ஹோத்ரா.
இதேபோல, மும்பை எம்.பி.கீர்த்தி செளமியா குழந்தைகளுக்காக போலியோ தடுப்பு மருந்து அளிக்கத் திட்டமிட்டுள்ளார். அவர் கூறுகையில் மும்பை நகர்முழுவதும், 345 நோய் தடுப்பு முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதில் தேசிய சமூக சேவை உறுப்பினர்கள் 3,000 பேர், டாக்டர்கள் 1,200 பேர்மற்றும் பலர் சேவை செய்வார்கள்.
இது மூன்றாவது நோய் தடுப்பு முகாமாகும். ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன் நோய் தடுப்பு முகாம் நடத்தப்பட்டது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
