ஆஸ்திரேலியாவில் 167 பேர் கடலில் மூழ்கினர்
கான்பெரா:
இந்தோனேசியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு வந்த படகு கடலில் கவிழ்ந்ததில் 167 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக ஆஸ்திரேலியகுடியேற்றத் துறை அமைச்சர் பிலிப் ரூடாக் புதன்கிழமை தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அமைச்சர் ரூடாக் இது குறித்து கூறுகையில், இந்தோனேசியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியான அஷ்மோர் தீவுகளைநோக்கி படகு வந்து கொண்டிருந்த ஒரு படகு கடலில் மூழ்கியது. இதில் 87 பேர் இருந்தனர். மோசமான வானிலை காரணமாக கடல் கொந்தளிப்பாகஇருந்ததால் படகு கவிழ்ந்ததாகத் தெரிகிறது.
மேலும் விபத்துக்குள்ளான படகைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த இன்னொரு படகும் காணவில்லை. அது குறித்த எந்த விவரமும் இதுவரைதெரியவில்லை. அந்தப் படகில் 80 க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
படகில் வந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அனுமதியில்லாமல் வேறு நாட்டுக்குப்குடிபெயர்பவர்களாக இருக்கலாம். மேலும் அவர்கள் அனைவரும் இந்தினோசியா வழியாக ஆஸ்திரேலியா நோக்கி வந்தவர்களாகவும் இருக்கலாம்.
விபத்துக்குள்ளான படகுகள் இந்தோனேசியாவிலிருந்து கடந்த வாரம் கிளம்பிச் சென்றிருக்கலாம் என்றும், அது மூன்று நாட்களில் ஆஸ்திரேலியாவில்உள்ள ஆஷ்மோர் தீவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதே போல் கடந்த ஏப்ரல் மாதம் மோசமான வானிலை காரணமாக இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே 250 க்கும்மேற்பட்டோர் 3 படகுகள் கவிழ்ந்ததில் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அனுமதியின்றி ஆஸ்திரேலியா நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்த ஆண்டில் ஜூன் மாதம் மட்டும் 4,000 பேர் அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்துள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications