"இந்தியாவுக்கு 6 சிறந்த டெஸ்ட் வீரர்கள் தேவை
ராஜ்கோட்:
இந்திய டெஸ்ட் போட்டி அணிக்கு 6 தலைசிறந்த வீரர்கள் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின்பயிற்சியாளர் ஜான் ரைட் கூறியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்ற பின் அணியின் நிலைமை குறித்து ராஜ்கோட் நகரில்செய்தியாளர்களிடம் ரைட் பேசியதாவது:
இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றேன். அதுமுதல் அணி சிறப்பாகவிளையாடி வருகிறது. இருப்பினும், இந்திய டெஸ்ட் அணிக்கு தலைசிறந்த 6 வீரர்கள் தேவை என்று உணர்கிறேன்.
நன்றாக பேட் செய்வதற்கும், தினசரி 10 முதல் 15 சிறந்த ஓவர்களை வீசவும் இவர்கள் திறம் படைத்திருக்கவேண்டும்.
கும்ப்ளே மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். எனவே இப்போதைக்கு 4 பந்துவீச்சாளர்கள் போதும். ஆனால்,கும்ப்ளே இல்லாவிட்டால், 5 பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவர்.
அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். சரியான குறிக்கோளுடன் அவர்கள்விளையாடுகின்றனர். எது முக்கியமோ அதைத் தெரிந்து ஆடுகிறார்கள். இப்போதைய நிலையில், ஒருநாள்போட்டிகளில் சிறந்த அணி இந்திய அணிதான் என்பதை மறுக்க முடியாது. டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்அணியை சிறந்ததாக உருவாக்க வேண்டும்.
பீல்டிங்கில் இந்தியா இன்னும் பின் தங்கியே உள்ளது. இதை சரி செய்தாக வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் கேட்ச்மிகவும் முக்கியமானது. மிகப் பெரிய அணிகளுடன் விளையாடும் போது அவர்களை வெல்ல வேண்டுமானால்,கேட்சுகளை தவற விடக் கூடாது.
இந்திய வீரர்களுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. இந்திய அணியுடன் இருக்கும் இந்த்த தருணங்கள எனக்குமறக்க முடியாதவை. இன்னும் இவர்களை சிறப்பாக விளையாட வைக்க முடியும் என்று நம்புகிறேன் என்றார் ரைட்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications