மூடப்படுகிறது கோலார் தங்கச் சுரங்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கோலார் தங்கச் சுரங்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் மூடப்படும்என சுரங்க இயக்குனர் கூறியுள்ளார்.

பெரும்பான்மையான அளவில் தமிழர்கள் பணிபுரியும் கோலார் தங்க வயலுக்கு மூடுவிழா நடத்தப்படுகிறது. நஷ்டம் காரணமாக இந்த தங்க வயல் மூடப்படுவதாகஅறிவிக்கப்பட்டது. தற்போது தங்க வயல் மூடப்படும் தேதி அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோலார் தங்கச் சுரங்க இயக்குனர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் தெரிவித்ததாவது:

கோலார் தங்கச்சுரங்கத்தில் இதுவரை ரூ 302 கோடிஅளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.10 கிராம் தங்கம் எடுக்க ரூ 19,300 செலவாகிறது. இது போன்ற பல காரணங்களால்சுரங்கத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர் ஊதியம், மின் கட்டணம் உள்ளிட்ட பலவற்றுக்காக மாதந்தோறும் ரூ 3கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது.மத்திய அரசு தொடர்ந்து சுரங்கத்தை நடத்தமறுத்து விட்டதால் சுரங்கம் மூடப்படுகிறது.

3 மாதத்திற்கு முன்பே தொழிலாளர் நலத்துறைக்கு இது குறித்து தெரிவிக்கப்படவேண்டும் என்பதால் நவம்பர் மாதம் 29-ம் தேதி நோட்டீஸ் மூலம்தெரிவிக்கப்பட்டுவிட்டது.

தங்கச்சுரங்கத்தில் 3,901 பேர் பணிபுரிகின்றனர். சுரங்கம் மூடப்படுவதால்தொழிலாளர் நலன் கருதி இரண்டு விதமான விருப்ப ஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.)அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெரிய தொழிற்சாலையில் பணி புரிந்து விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் ஓய்வுபெறும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ 2 லட்சத்து 4 ஆயிரத்து 800 நிவாரணபணமாக கிடைக்கும்.

அல்லாது குஜராத் திட்டத்தின் மூலம் தானாக ஓய்வு பெறும் ஒவ்வொருதொழிலாளருக்கும் ரூ 2 லட்சத்து 47 ஆயிரம் கிடைக்கும்.

இந்த இரு திட்டத்தில் எதை வேண்டுமானாலும் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான கடைசி நாள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம்தேதி.

தொழிலாளர்களுக்கான நிவாரண தொகை கணக்கிடப்படும் போது பணியாற்றியஒவ்வொரு ஆண்டுக்கும் 35 நாட்கள் சம்பளமும், பணி செய்யாத போது ஒவ்வொருஆண்டுக்கும் 25 நாட்கள் சம்பளமும் கணக்கில் சேர்க்கப்படும். ஜனவரி 10-ம் தேதிக்குமுன் ஓய்வு பெற விரும்புபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

கோலார் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றுபவர்களில் 500 தொழில் நுட்ப வல்லினர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வேறு இடங்களில் வேலை அளிக்கப்படும்.

தங்கச்சுரங்கத்திற்கு சொந்தமான மருத்துவமனை டென்டர் மூலம் தனியாரிடம்ஒப்படைக்கப்படும். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் தொடர்ந்துபணியில் நீடிப்பார்கள். சுரங்கத்தால் நடத்தப்படும் பள்ளி மாநில அரசிடம்ஒப்படைக்கப்படும்.

ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் தொழிலாளர் குடியிருப்புகளில் அவர்கள்தொடர்ந்து வசிக்க ஏற்பாடு செய்யப்படும். மற்ற செலவுகளை தொழிலாளர்களே ஏற்கவேண்டும்.

தங்கச் சுரங்கம் மூடப்பட்டாலும் நீதிமன்ற ஆலோசனையின்படி மத்திய அரசுதனியாரிடம் சுரங்கத்தை ஒப்படைக்கலாம். குறைந்த அளவு தொழிலாளர்களைக்கொண்டு அவர்கள் சுரங்கத்தை நடத்தும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+