புலிகளுடன் பேச்சுக்குத் தயார் .. இலங்கை அறிவிப்பு
கொழும்பு:
விடுதலைப்புலிகளுடன் உடனடிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அதே சமயம் பேச்சுவார்த்தையின் போது சண்டைநிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்ற புலிகளின் நிபந்தனையை இலங்கை அரசு நிராகரித்தது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நிருபர்களிடம் கூறியதாவது:
இனப்பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண இலங்கை அரசு தயாராக இருக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தை உடனடியாக ஆரம்பிக்கப்படாததற்கு ஒருகாரணமும் இல்லை. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் பேச்சுவார்த்தை நடக்கும் நேரத்தில் யாழ்ப்பாணத்தில் சண்டைநிறுத்தம்என்ற பேச்சுக்கே இடமில்லை.
இலங்கையில் நடந்து வரும் சண்டை மற்றும் அனைத்து விதமான தீவிரவாத நடவடிக்கைகளையும் தடுத்த நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுவிரும்புகிறது. இதற்காக விரைவில் நல்ல அரசியல் தீர்வையும் காண இலங்கை விரும்புகிறது. பல தடவை பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்தும்அதை நாம் நழுவ விட்டு விட்டோம்.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் நார்வே தூதுக்குழுவின் முயற்சி, விடுதலைப்புலிகளும், இலங்கை அரசும் நேருக்குநேர் சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தும் அளவுக்கு புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆனால் எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் தீர்மானம்எடுக்கப்படவில்லை.
பிரபாகரன் தலைமையில் செயல்படும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சண்டையில் இதுவரை 60,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதைக் கருத்தில் கொண்டும், இது போன்ற உயிர்ப்பலிகள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும் நார்வே தூதுக்குழுத் தலைவர்எரிக் சோல்ஹெம், கடந்த நவம்பர் 1 ம் தேதி புலிகள் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது பிரபாகரன் இலங்கைப் பிரச்சனைகுறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றார்.
மேலும் புலிகள் மாவீரர்கள் தினம் கொண்டாடிய போதும் பிரபாகரன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும், அதே சமயம்யாழ்ப்பாணத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்போது மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் நாங்களும்பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று பிரபாகரன் கூறியதாக கதிர்காமர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications