புலிகளைத் தடை செய்யுங்கள் .. கோருகிறது இலங்கை
கொழும்பு:
சர்வ தேச நாடுகள் அனைத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாதஅமைப்பாக அறிவிக்க வேண்டுமென இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாதஇயக்கம் என அறிவிக்க வேண்டும். அந்த இயக்கங்கள் நிதி வசூல் செய்வதற்கும் தடைசெய்ய வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தி வருகிறது.
இது பற்றி இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கென பலர் லண்டனில் நிதி திரட்டி வருகிறார்கள்.அங்கே தலைமைச் செயலகம் அமைத்து விடுதலைப்புலிகள் சுதந்திரமாக செயல்பட்டுவருகின்றனர்.
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டுமென்றுஇலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. பிரிட்டனைத் தவிர மற்ற சர்வதேச நாடுகளும்தீவிரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும்.
40க்கும் அதிகமான நாடுகளில் விடுதலைப்புலிகள் செயல்பட்டு வருகிறார்கள்.இந்தியாவிலும் அமெரிக்காவிலும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள்நீக்கப்பட்டால்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கு பெறுவோம் என லண்டனில்இருக்கும் புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கியகுற்றவாளியாக கூறப்பட்ட விடுதலைப்புலிளின தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம்ஒப்படைக்க வேண்டும் என இலங்கைக்கு இந்சியா கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை தேடி வருவதாக சர்வதேசபோலீஸ் அமைப்பு இன்டர்போல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications