"தகவல் தொழில்நுட்பம் மட்டும் முன்னேற்றத்திற்குப் போதாது
கோவை:
தகவல் தொழில் நுட்பத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் நாடு முன்னேறாது. மற்ற தொழில் நுட்பங்களிலும்கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் (யூ.ஜி.சி) தலைவர் ஹரிகவுதம் தெரிவித்தார்.
கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்புவிருந்தினராக பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் ஹரி கவுதம் கலந்து கொண்டார். இவருக்கு பல்கலைக்கழக வேந்தர் ராஜம்மாள் தேவதாஸ் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் ஹரி கவுதம் பேசியதாவது:
இப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பக் கல்விக்குத் தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக முக்கியத்துவம்கொடுத்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்பக் கல்விக்கு அரசும் அதிக முக்கியத்துவம் தருகிறது.
ஆனால், தகவல் தொழில்நுட்ப அறிவு மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், நவீன உலகின் வெற்றிக்கும்அடிப்படையாக இருந்து விட முடியாது. இதனால் ஒரு நாடு வேகமாக முன்னேறி விட முடியாது. அறிவை தகவல்தொழில்நுட்பத்துடன் சமன்படுத்த வேண்டும். மற்ற துறைகளும் இந்த தகவல்தொழில் நுட்பத்திற்கு இணையாகச்சென்றாக வேண்டும்.
பள்ளிகளிலும் சரி, கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் சரி, ஆசிரியர்களின் மதிப்பு மாணவர்கள் மத்தியிலும்,சமுதாயத்திலும் குறைந்து கொண்டே இருக்கிறது.
பொது மக்களிடையே ஆசிரியர்களுக்கு இருந்து வந்த மதிப்பு மாறி வருகிறது. இதனால் கல்வித் தரம் குறைந்துவருகிறது. இது ஒட்டு மொத்தமாக நாட்டின் கல்வித் தரத்தை சீரழிப்பதாக மாறி விடக் கூடாது.
கல்லூரி ஆசிரியர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும். பல்கலைக் கழக ஆசிரியர்கள் வேலைகுறைவு, சம்பளம் அதிகம் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டு வருகின்றனர். கற்பிப்பதில் ஆர்வமோ, ஆய்வோமேற் கொள்ளப்படுவதில்லை என்றார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சந்திராமணி அறிக்கை வாசித்தார்.முதுகலைப் பட்டமாக 18 மாணவிகளும், இளங்கலையில் 29 மாணவிகளும், இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் 4மாணவிகளும் பதக்கங்களைப் பெற்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications