வாஜ்பாய் விலகத் தேவையில்லை .. மக்கள் தமிழ்தேசம்
சென்னை:
அயோத்தி பிரச்சனை தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் பதவி விலகத் தேவையில்லை என்று மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பன் தெரிவித்தார்.
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பன் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்துக்கு விரைவில் தேர்தல் வருகிறது. நாங்கள் ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்வோம்.
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாநாடு சென்னையில் வரும் 23 ம் தேதி நடக்கிறது. மாநாட்டுக்கு 15 ஆயிரம் வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள்.எங்கள் ஆட்சியின் பலத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் மாநாடு அமையும்.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் பேசியிருப்பது நாட்டின் இறையாண்மையைப்பாதிக்கும். மதச்சார்பற்ற தன்மைக்கு பாதகம் விளைவிக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
மதச்சார்பற்ற தன்மையைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். இதை உணர்ந்து கொண்டு பாஜக நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்துக்காக பிரதமர்வாஜ்பாய் பதவி விலக வேண்டாம்.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதியைக் குறைக்கக் கூடாது. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயல்படுத்தும் மாநிலங்களில் மக்கள் தொகைகுறைந்து இருக்கும் என்றார் கண்ணப்பன்.












Click it and Unblock the Notifications