For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒதுங்கினார் கோர் அதிபராகிறார் புஷ்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி பதவியை அடைவதற்கான தனது கடைசி முயற்சியும் தோல்வியடைந்த நிலையில், தனதுபிடிவாதத்தைக் கைவிட்டார் துணை ஜனதாதிபதியும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான அல்கோர்.இதையடுத்துஅடுத்த அமெரிக்க ஜனாதிபதியாகிறார் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜூனியர்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்து 35 நாட்கள் முடிவடைந்த நிலையில், 36-வது நாளில் குழப்பநிலைக்கு முடிவு வந்தது. அல் கோர் தனது பிடிவாதத்தை கைவிட்டார். ஜார்ஜ் புஷ்ஷுக்கு வாழ்த்துத்தெரிவித்ததுடன், அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்ற கேள்விக்கும் விடை தந்தார்.

புளோரிடா மாநில வாக்குகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தேர்தல் நடந்தும், அதிபர் யார்என்று தெரிவதில் வரலாறு காணாத குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து உலக நாடுகளின் கண்கள் அமெரிக்காவின்மீது விழுந்தது. மாறி, மாறி, கோரும்,புஷ்ஷும் வழக்குகளாகத் தொடுத்து வந்தனர்.

இறுதியாக, புளோரிடா ஓட்டுக்களை மீண்டும் கைகளால் எண்ண அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.இதனால் கோருக்கு இருந்த கடைசிக் கதவும் அடைக்கப்பட்டு விட்டது. தனது தோல்வியை கோர் ஒப்புக் கொண்டவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. இருந்தும் கோர் மெளனம் சாதித்தார்.

இந்த நிலையில் மெளனம் கலைந்து, தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு, புஷ்ஷுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கோர். இதையடுத்து அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற இழுபறிக்கு முடிவு வந்துள்ளது.

தனது முடிவை நாட்டுக்கு ஆற்றிய உரையில் கோர் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அவர்உரையாற்றியபோது, மனைவி டிப்பர், குடும்ப உறுப்பினர்கள், துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட ஜோசப்லிபர்மேன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கோர் பேசுகையில், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அமெரிக்காவின் 43-வது அதிபராகபதவியேற்கவுள்ள ஜார்ஜ் புஷ்ஷுக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தேன். மீண்டும் வழக்குத் தொடரமாட்டேன் என்று அவரிடம் உறுதியளித்தேன்.

புஷ்ஷுக்கு அமெரிக்கர்கள் தங்களது உறுதியான ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். புஷ்ஷை நேரில் சந்திக்கவிரும்பினேன். இதன் மூலம் தேர்தல் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கசப்புணர்வுகளைமறக்க முடியும்.

தேர்தலின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அமெரிக்கர்கள் மறந்து விட்டு, நாட்டை ஐக்கியப்படுத்தும்அடுத்த அதிபரின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

தேர்தலில் நான் தோற்றதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். புஷ்ஷை விட கூடுதலாக மக்கள் வாக்குகளை நான்பெற்றுள்ளேன். இருப்பினும் தேர்தல் முடிவில் நான் தோல்வியடைந்து விட்டேன். இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் ஐக்கியத்திற்காக இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்பட்ட குழப்பத்தை பலவீனமானதாக எடுத்துக் கொள்ள உலக நாடுகள் முயற்சிக்கவேண்டாம். அமெரிக்க ஜனநாயகமே உலகில் வலுவானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்என்றார் கோர். சுமார் 10 நிமிடங்கள் கோர் பேசினார்.

கோர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டதால், அடுத்த அதிபர் பதவியேற்பது தொடர்பான ஏற்பாடுகள்வெள்ளை மாளிகையில் துவங்கி விட்டது. அமெரிக்காவின் 43-வது அதிபராக ஜார்ஜ் புஷ், அடுத்த ஆண்டுஜனவரி 20-ம் தேதி வெள்ளை மாளிகை வளாகத்தில் பதவியேற்பார். அதற்கு முன், அமெரிக்க எலக்டோரல்பிரதிநிதிகள் கூடி ஜார்ஜ் புஷ்ஷை அதிபராகத் தேர்வு செய்வர். மொத்தம் 537 எலக்டோரல் பிரதிநிதிகள் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X