Guru Peyarchi 2026: மிதுன ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்வது நல்லது
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மீனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு மிதுன ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு 7க்கும், 10க்கும் உரியவரான குரு பகவான் 2 ஆம் இடத்திற்கு வருகிறார். இதயம் தொடர்பான பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது. காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி, முகத்தில் உள்ள உறுப்புகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். முகத்தில் உள்ள உறுப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பேச்சில் கவனம்
வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பதால் பிறரைத் திட்டுவது, கோபப்படுவது, சாபம் விடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மீண்டும் அவை உங்களுக்கே திரும்பும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை. நிறைய சுப காரியங்கள் நடக்கும் காலகட்டம். தொழில், படிப்பில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
தொழில்
தனி தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக தனியாக தொழிலைத் தொடங்கலாம். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எதிரிகள் விஷயத்தில் சுமூகமாக செல்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பதில் வெற்றி காண்பீர்கள். எதிரிகள் விஷயத்தில் இணக்கமாக செல்வது நல்லது. வழக்குகளில் வெற்றி ஏற்படும். ஒருவிதமான பயங்கள் எல்லாம் தீரும். யோக பலத்தை அதிகளவில் பெறும் அமைப்பு. இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். வாக்கு கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பெரிய சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
வழிபாடு
திருவெண்காடு புதன் ஸ்தலத்திற்குச் சென்று வருவது விஷேசத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். பெண்களுக்கு அற்புதமான தொழில் கிடைக்கும். ஐபிஎஸ், ஐஏஎஸ், போட்டித் தேர்வு, அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். அரசியலில் ஒன்றுமே தெரியாதவர்கள் கூட உயரிய பதவிக்கு செல்லும் யோகம் உண்டாகும். எல்லா விஷயங்களிலும் ஏறமுகமாக இருக்கும் டாப் கிளாஸான காலகட்டம்.
மாற்றங்கள் வந்தால் எடுத்துக் கொள்வது நல்லது. யாருக்கும் வாக்கு கொடுத்து சிக்கிக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. நிறைய நல்லவை நடக்கும். குடும்பத்தில் மட்டும் யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
-
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications